ரஷ்யாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வந்தனர்!

Date:

கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,375 ஆக இருப்பதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2022 ஜனவரியில் இருந்து 29,514 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு மொத்தம் 204,345 வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 178,834 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25,511 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்