இன்றைய வானிலை!

Date:

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்