தமிழக அமைச்சரின் மகள் 2வது முறையாக காதலருடன் தப்பித்தார்: தந்தையிடமிருந்து பாதுகாப்பு கோரி பெங்களூரில் சரண்!

Date:

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன், தந்தையிடமிருந்து பாதுகாப்பு கோரி பெங்களூர் பொலிசாரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி. அமைச்சரின் வீட்டில் வேலைக்கு சென்றவர் சதீஷ் குமார். ஜெயகல்யாணிக்கும் – சதீஷ் குமாருக்கும் இடையே கடந்த பல வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதில், ஜெயகல்யாணி மருத்துவம் பயின்றுள்ளார். சதீஷ் டிப்ளமோ பட்டதாரி. தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக காதல் ஜோடி வீட்டினை விட்டு வெளியேறி சென்ற நிலையில், காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்யப்படாமல் மும்பையில் இருந்த ஜெயகல்யாணி மீட்டு வரப்பட்டதாக தெரியவருகிறது.

இதுகுறித்து சதீஷ் குமார் ஏற்கனவே வீடியோ பதிவு செய்து இருந்தார்.

அதில், அமைச்சரால் எனது உயிருக்கும், காதலியின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. என் மீது பொய்யான புகார் அளிக்கிறார்கள், எனது குடும்பத்தை மிரட்டுகிறார்கள் என சதீஷ் குமார் கதறி இருந்தார்.

இந்நிலையில், இந்த காதல் ஜோடி மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியேறி, காரில் செல்லும் போது காதல் ஜோடி வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம். எங்களை காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னர் நேற்று திங்கட்கிழமை பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்திடம், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கோரி அணுகினார். அத்துடன்,கமிஷனரிடம் மனு அளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள், சதீஷ்குமாருடன் 6 வருடங்கள் தொடர்பு இருப்பதாகவும், தற்போது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். “சதீஷ் குமார் மீதான எனது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, ​​போலீசார் அவரை கைது செய்து இரண்டு மாதங்கள் காவலில் எடுத்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

“இதற்கு பின்னால் என் தந்தையின் பங்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நான் வயது வந்தவள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்” என்று ஜெயகல்யாணி கூறினார்.

தமிழகம் திரும்பினால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தற்போது ஜெயகல்யாணி மற்றும் சதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தமிழகத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது தந்தை அமைச்சர் என்பதால் எங்களை அல்லது காதலனை கொலை செய்திடுவார்கள் என அச்சம் உள்ளது. அதனால் கர்நாடக மாநிலத்தின் உதவியை நாடி வந்துள்ளோம். பெங்களூர் மாநகர ஆணையரிடம் நாங்கள் பாதுகாப்பு வழங்க கூறி புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்