இன்றும் (7) மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
E மற்றும் F வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேர மின்வெட்டையும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மீண்டும் இரண்டு மணி நேரம் 30 நிமிட மின்வெட்டு அமுலாகும்.
போதுமான எரிபொருள் கையிருப்பு கிடைத்தால், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது அல்லது மின் தடையின் காலம் குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
பெறப்படும் எரிபொருள் கையிருப்பின் அடிப்படையில் மின்சாரம் தடைபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.