தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஸ் நட்ராஜிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த கடிதம் வருமாறு-
திருச்சி சிறப்பு முகாம் சிறைவாசிகளாகிய நாங்கள் கடந்த பல வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம். இங்கே இலங்கையை சோந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 50 பேர் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
இங்கிருந்த நாடு செல்லவிரும்பும் அனைவரும் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முயன்றமை, இந்திய நுழைவுச்சீட்டு முடிந்தபின்னரும் வசித்தமை மற்றும் இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு முறையான நீதிமன்ற பிணையில் வெளிவந்துää மறுபடியும் சிறப்பு முகாம் எனும் வெளிநாட்டவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.
இக் குற்றத்துக்காக இரண்டில் இருந்து 4 வருடங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும் தற்போது கொரோனா எனும் பெரும் தொற்றை காரணம் காட்டியும் எமது வழக்குகள் பின்நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறன.
ஐயா எமது குடும்பங்கள் இலங்கையில் மிகவும் வறுமையிலும் எங்களது உதவியும் இன்றி பல வருடங்களாக மனஉழசை;சலுக்கு உள்ளாகி வாழ்கின்றனர். நாங்களும் எமது விடுதலைக்காக இங்கு பல போராட்டங்களை அமைதியான முறையில் நடாத்தி வந்தோம் ஆனால் இன்று வரைக்கும் எந்தவித முடிவும் இல்லாமல் இங்கு துயரப்பட்டு வாழ்கிறோம். எமது உயிரைக்கூட மாய்க்கும் மனவிரக்திக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஐயா இந்த நாட்டு அரசுடன் பேசி எமது வழக்குகளை ரத்து செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் எம்மை எமது தாய் நாட்டுக்கு மீட்டு எடுக்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் பணிவுடன் எமது உறவுகள் ஊடாக கேட்டுக்கொள்கிறோம்.