உக்ரைனில் ரஷ்யப்படைகள் நடத்திய செல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை கார்கிவ் கவர்னர் மாளிகை மீது ரஷ்யயா நடத்திய தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டு, “இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“கார்கிவ் மற்றும் பிற மோதல் மண்டலங்களில் உள்ள நகரங்களில் இன்னும் இருக்கும் இந்தியப் பிரஜைகள் அவசரமாகப் பாதுகாப்பான பாதையில் செல்ல வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த, ரஷ்யா மற்றும் உக்ரைனின் தூதர்களை வெளியுறவுச் செயலர் அழைக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள எங்கள் தூதர்களால் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, ”என்று மேலும் கூறியது.