23.7 C
Jaffna
March 8, 2025
Pagetamil
மலையகம்

இரண்டு லொறிகள் மோதி விபத்து!

நுவரெலியா – அட்டன் வீதியில் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியொன்று பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் மரக்கட்டையை ஏற்றிச் சென்ற போது செங்குத்தான ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு லொறியை முந்திச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஏதிரே வந்த லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மற்றைய லொறியும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு லொறிகளில் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment