29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

மகனிற்காக களமிறங்கிய அப்பா: வவுனியா மாவட்ட எம்.பி குழு – இளைஞர் குழு களேபரம்! (VIDEO)

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும், பிறிதொரு இளைஞர் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக காட்சியளித்தது.

வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குளுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் (26) குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.

இரண்டு தினங்களிற்கு முன் ஏற்பட்ட அடிதடியில், இளைஞர் குழுவொன்றில் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் கு.திலீபனின் மகனும் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மகன் தாக்கப்பட்ட நிலையில், அவரை தாக்கிய இளைஞர் குழுவை தேடியே, திலீபன் எம்.பி குழுவினர் வந்துள்ளனர்.

இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு மற்றொரு குழுவினரும் வந்திறங்கினர்.

அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் குழுவை தாக்கத் தொடங்கினர். அவர்களும் திரும்பித் தாக்கினர். இதனால் இருதப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்பட்டனர். குறித்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டநிலை ஏற்ப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார். எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்ப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்கள்-

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!