கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக, கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த வழக்கில் இடுக்கி வண்டன்மேடு ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் சௌமியா ஆபிரகாம் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். சௌமியாவுக்கு போதைப்பொருள் வழங்கிய சாஸ்தம்கோட்டாவைச் சேர்ந்த ஷாநவாஸ் (39), கொல்லத்தைச் சேர்ந்த ஷெபின் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவரது காதலன் புட்டடியைச் சேர்ந்த வினோத் (44) என்பவரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
வண்டன்மேடு பகுதியில் வசித்து வருபவர் சுனில் வர்கீஸ் (38). இவரின் மனைவி சௌமியா (33).
இதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் வினோத். சௌமியாவிற்கும் – வினோத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
துபாயில் வினோத்துக்கு வேலை கிடைத்து சென்றுவிட்டாலும், அவ்வப்போது பணம் செலவு செய்து ஊருக்கு வந்து சௌமியாவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், சௌமியாவின் கணவர் சுனில் வர்கீஸ் பைக்கில் இருந்து போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.
இருப்பினும், சுனில் நிரபராதி என்றும், அவரை யாராவது சிக்க வைக்க முயன்றிருக்கலாம் என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி நவாஸ் கருதினார். எனவே அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்த பின்னரே குற்றவாளியை கைது செய்ய முடிவு செய்தார்.
சுனிலிடம் இருந்து மிகக் குறைந்த அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ள குற்றமது.
பொதுமக்களின் கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும், நவாஸ் சுனிலின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதை தவிர்த்தார்.
சௌமியா அரசியலில் இருப்பதால், அவரது எதிரிகள் சுனிலை சிக்க வைக்க முயன்றிருக்கலாம் என்று போலீசார் முதலில் ஊகித்து, வர்கீஸின் கடத்தல் பற்றி மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு அதிரடி படைக்கு தகவல் கொடுத்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
பலரிடம் விசாரணை நடத்திய போலீசார், ஷாநவாஸ் என்ற தகவலின் மூலத்தை அடைந்தனர். வண்டன்மேடு போலீசார் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அவரை காவலில் எடுத்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வினோத் மற்றும் சௌமியாவுடன் அவருக்கு இருந்த தொடர்புகளை உறுதி செய்தனர்.
வெளிநாட்டிலுள்ள வினோத்தும், சௌமியாவும் கள்ளக்காதலில் விழுந்த பின்னர், தமது துணைகளை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சுனில் வர்கீஸை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த திட்டத்தை கைவிட்டனர். அப்போது சுனிலை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து, வழக்கின் பெயரில் விவாகரத்து கேட்க முடிவு செய்தனர்.
இந்த போதைப்பொருளை வினோத், சௌமியாவுக்கு அனுப்பி வைக்க, சௌமியா தனது கணவருக்கு தெரியாமல் அவரின் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வினோத் தனது நண்பரின் மூலமாக சுனிலின் இருசக்கர வாகனத்தில் போதைப்பொருள் இருப்பதாக இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமியிடம் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்த வண்டன்மேடு காவல் துறையினருக்கு உத்தரவிடவே, அதிகாரிகள் சுனிலின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் சுனில் வர்கீஸ் நிரபராதி என்பது உறுதியானது. இதனால் அவரை விடுவித்த காவல் துறையினர் சௌமியா, ஷாநவாஸ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
வினோத் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.