Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

UPDATES ரஷ்யா-உக்ரைன் போர் 2ஆம் நாள்: உக்ரைன் ஆட்சியாளர்கள தூக்கி எறியுங்கள்; நாங்கள் பேசி தீர்வு காண்போம்; ரஷ்ய ஜனாதிபதி

♦உக்ரைன் தலைநகரிற்குள் இன்று ரஷ்ய டாங்கிகள் நுழையலாமென கருதப்படுகிறது.

♦ நான்தான் முதல் இலக்கு. ஆனால் தலைநகரிலேயே இருப்பேன்- உக்ரைன் ஜனாதிபதி

♦96 மணித்தியாலங்களில் உக்ரைன் தலைநகர் வீழ்ச்சியடையலாம்.

♦தலைநகரை காப்பாற்றும் முயற்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி

♦வரலாற்றில் மோசமான அணுஉலை விபத்து இடம்பெற்ற செர்னோபில் அணு உலையை ரஷ்யப் படைகள் கைப்பற்றின

♦முதல்நாள் யுத்தத்தில் 137 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு


அதிகாரத்தை கைப்பற்றுங்கள்: உக்ரைன் இராணுவத்திற்கு புடின் அழைப்பு!

உக்ரைனிய அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு, அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள் என, உக்ரைனிய இராணுவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்தார்.

பயங்கரவாதிகள், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் நவ நாஜிக்களின் கும்பல் என்று உக்ரைனிய அரசாங்கத்தை விவரித்த அவர், அதனை தூக்கி எறியுமாறு உக்ரைனிய இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ரஷ்ய இராணுவத்தைத் தூண்டுவதற்காக “உக்ரேனிய தேசியவாதிகள்” பெரிய நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் கனரக ஆயுதங்களை நிலைநிறுத்துவதாகவும் புடின் குற்றம் சாட்டினார்.

ஒரு தொலைக்காட்சி உரையில், அவர் உக்ரேனிய இராணுவத்தை “உங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார்.

“இந்த போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் நவ-நாஜிக் கும்பலை விட நாங்கள் உங்களுடன் உடன்படுவது எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யூத பின்னணியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


உக்ரைனில் தப்பி ஓடுபவர்களை தடுக்க ஊரடங்கு சட்டம்!

உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

“ஊரடங்கு சட்டம் இன்று இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான உள்கட்டமைப்பில் பணிபுரியும் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு நாங்கள் பாஸ்களை வழங்குவோம், ”என்று உள்ளூர் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் மாக்சிம் கோசிட்ஸ்கி கூறியதாக உக்ரைனிய ஊடகங்கள் மேற்கோளிட்டுள்ளன.

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து உக்ரேனைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமாக தாக்கி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் மேற்கு நோக்கி தப்பி  ஓடிவிட்டனர். தப்பி ஓடுபவர்களை தடுத்து நிறுத்தவே ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.


2,800 ரஷ்ய படையினரை கொன்றோம்: உக்ரைன்

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தை சேர்ந்த சுமார் 2,800 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 டாங்கிகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட கவச வாகனங்களை இழந்துள்ளனர் என்று உக்ரைனின் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மாலியார் கூறினார். .

“உக்ரைன் பிரதேசத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் திறந்த பெரிய அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து, இன்று மாலை வரையான நிலவரப்படி பின்வரும் இழப்புகளை (தோராயமாக) சந்தித்தன: 80 டாங்கிகள் வரை, 516 கவச போர் வாகனங்கள் பல்வேறு வகையான, 10 விமானங்கள், 7 ஹெலிகொப்டர்கள், 2,800 பணியாளர்கள், ” என மலியார் வெள்ளிக்கிழமை பேஸ்புக்கில் எழுதினார்.


குழந்தையை பிரியும் தந்தை… நிலத்தடியில் பதுங்கியுள்ள மக்கள்: உக்ரைன் மக்களின் துயரத்தை பிரபலிக்கும் காணொளி தொகுப்பு!

ரஷ்ய படைகள் உக்ரைனின் மீது இரண்டாவது நாளாக கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் இதுவரை தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பலியாகிவிட்டதாகவும், ஏராளமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை தாக்குதலுக்கு அஞ்சி, நிலக்கீழ் மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்றைய இரவை மக்கள் கழித்தனர்.

ஏராளமான மக்கள் அண்டை நாடுகளிற்கு கால்நடையாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைனில் மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

(முழுமையான செய்திக்கு)


உக்ரைனின் ‘தலையை துண்டிப்பதே’ ரஷ்யாவின் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

ரஷ்ய இராணுவத்தினர் இன்று உக்ரைனின் தலைநகர் கீவ்வை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, புறநகர்ப் பகுதிகளிற்குள் ரஷ்ய இராணுவம் நுழைந்து, தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உக்ரைனினால் சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவத்தினர்

உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஹெராஷ்செங்கோ, வெள்ளிக்கிழமை போரின் கடினமான நாள் என்று கூறினார்.

(முழுமையானசெய்தி)


‘நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்; யாரும் துணையில்லை’: உக்ரைன் ஜனாதிபதி வேதனை!

“ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.

(முழுமையான செய்தி)


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு ஐரோப்பாவில் நடைபெறும் நாடுகளிற்கிடையிலான மிகப்பெரிய மோதலில், தலைநகர் கீவ்வை விட்டு வெளியேற மாட்டேன் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிற்கு அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா வியாழன் அன்று தரை, வான் மற்றும் கடல் வழியாக தனது படையெடுப்பைத் தொடங்கியது. முக்கிய நகரங்களில் விமான, ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதுடன், தரைப்படை நகர்வும் இடம்பெறுகிறது.

ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனியர்கள் நகரங்களிலிருந்து வெளியேறி வருகிறார்கள். தலைநகர் கீவ்வை விட்டு வெளியேற மக்கள் முண்டியடிக்கிறார்கள்.

நேற்று இரவு நிலத்தடி மெட்ரோ புகையிரத நிலையங்களில் பலர் தங்கினர். தமது உடைமைகள், செல்லப்பிராணிகளுடன் அங்கு மக்கள் கூடினர்.

கீவ்வை கைப்பற்றி அமெரிக்காவின் கைப்பாவையாக புடின் கருதும் அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்ய துருப்புக்கள் பெலாரஸிலிருந்து வடக்கே கீவ்வுக்குச் செல்லும் குறுகிய பாதையில் முன்னேறி வருகிறார்கள்.

“எதிரி என்னை நம்பர் வன் இலக்காகக் குறித்துள்ளார்” என்று ஜெலென்ஸ்கி ஒரு வீடியோ செய்தியில் எச்சரித்தார். “எனது குடும்பமே நம்பர் டூ டார்கெட். அவர்கள் அரச தலைவரை அழித்து உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கிறார்கள்.”

“நான் தலைநகரில் தங்குவேன். என் குடும்பமும் உக்ரைனில் உள்ளது.” என்றார்.

இதேவேளை, உக்ரைனின் 18-60 வயதிற்கிடையிலான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டுக்காக போராட வேண்டும்.

ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறாரா என, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனிடம் வினவப்பட்ட போது, “எனக்கு தெரிந்த வரையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைனில் தனது பதவியில் இருக்கிறார், நிச்சயமாக நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவரின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். உக்ரைனில் அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளோம்.” என்றார்.


உக்ரைன் தலைநகர் விரைவில் வீழ்ச்சியடையும்

உக்ரைன் தலைநகர் கீவ் சில நாட்களில் ரஷ்யப் படைகளிடம் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட விரைவாக, உக்ரேனியர்களின் எதிர்ப்பை ரஷ்யப் படைகள் சமாளித்து முன்னெறி வருவதால், விரைவில் உக்ரைன் வீழ்ச்சியடையுமென அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ரஷ்யத் துருப்புக்கள் நேற்று மூலோபாய செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய பின்னர், தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன.

அடுத்த 96 மணி நேரத்திற்குள் தலைநகரை ரஷ்யா கைப்பற்றுமென உக்ரைனும் அச்சம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய துருப்புக்களை கீவ்வில் சுற்றி வளைத்து அவர்களை சரணடையவோ அல்லது அழிக்கவோ திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரைனின் தலைமை ஒரு வாரத்தில் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் கூறினார்.

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் நியூஸ் வீக்கிடம் கூறினார்: ‘வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் முடிந்து தரைப் போர் உண்மையில் தொடங்கிய பிறகு, சில நாட்களில் கீவ் வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.

இராணுவம் சிறிது காலம் நீடிக்கலாம் ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை.’ என்றார்.

உக்ரைனிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறுகையில், 96 மணி நேரத்திற்குள் கீவ் சுற்றி வளைக்கப்படும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர், ஆனால் அரசாங்கம் வலுவாக இருக்கும் மற்றும் வீழ்ச்சியடையாது என்று நம்புகிறார்கள்.

தலைநகரத்தின் உடனடி வீழ்ச்சியை தடுக்கும் முயற்சியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று இரவு விளாடிமிர் புட்டினிடம் பேசினார், அவர் போருக்கான தனது நியாயத்தை ‘முழுமையான’ விளக்கத்தை பிரெஞ்சு தலைவருக்கு வழங்கினார்.

மக்ரோனின் முன்முயற்சியின் பேரில் இந்த பேச்சு நடந்ததாக கிரெம்ளின் கூறியது, அவரும் புட்டினும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.


செர்னோபில் அணு உலை ரஷ்யா வசம்

உக்ரைனின், செர்னோபில் அணு உலை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக், செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாகக் கூறினார்.

“ரஷ்யர்களின் முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதலுக்குப் பிறகு செர்னோபில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூற முடியாது,” என்று அவர் கூறினார்.

“இது இன்று ஐரோப்பாவில் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்” என்று பொடோலியாக் கூறினார்.

36 ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபில் அணு மின் நிலைய விபத்தே, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவாக கருதப்படுகிறது. அதிலிருந்து கதிரியக்கத்தன்மை இன்னும் கசிந்து கொண்டிருக்கும் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா இப்பொழுது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இகோர் நோவிகோவ், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முன்னாள் ஆலோசகர், செயலிழந்த அணுசக்தி நிலையத்தால் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளதாக எச்சரித்தார்.

“அதாவது, உக்ரைனில் செர்னோபிலில் 15 அணு உலைகள் மற்றும் அணுக் கழிவுகள் உள்ளன: ஒரு மோட்டார் செல் தவறுதலாக தாக்கினால் ஐரோப்பாவில் உள்ள அனைவரும் ஒரு பெரிய அணுசக்தி பேரழிவை எதிர்கொள்கிறார்கள்” என்று கூறினார்.

செர்னோபில் விலக்கு மண்டலம், மூடப்பட்ட ஆலையைச் சுற்றியுள்ள 2,600 சதுர கிலோமீட்டர் (1,000-சதுர மைல்) காடு மண்டலம், பெலாரஸ்-உக்ரைன் எல்லைக்கும் உக்ரேனிய தலைநகருக்கும் இடையே அமைந்துள்ளது.


இதுவரை 137 பேர் பலி

இதுவரை 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிரிழந்தவர்களை “ஹீரோக்கள்” என்று அழைத்தார். மேலும், 316 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் மக்களைக் கொன்று, அமைதியான நகரங்களை இராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது, ”என்று ரஷ்ய படைகளைப் பற்றி ஜெலென்ஸ்கி கூறினார்.


யப்பானும் தடைவிதிக்கும்

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஜப்பான் வலுப்படுத்தும் என்று பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் மற்றும் ராணுவ உபகரண ஏற்றுமதி உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஜப்பான் வலுப்படுத்தும் என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நெருக்கடியில் இருந்து ஜப்பானுக்கு பொருளாதார பாதிப்பை மட்டுப்படுத்த ஜப்பானும் முடிந்த அனைத்தையும் செய்யும், என்றார்.

இதையும் படியுங்கள்

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!