Pagetamil
இலங்கை

தமிழ் இனஅழிப்பில் இராணுவம் ஈடுபடவில்லை; தமிழர்கள் எனக்கு அமோகமாக வாக்களித்ததே சாட்சி: சரத் பொன்சேகா!

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனஅழிப்பு இடம்பெறவில்லை. இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு அழிவினை ஏற்படுத்தினார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. அதனால்தான் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எனக்கு அமோக ஆதரவளித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனஅழிப்பு ஒன்று இடம்பெற்றதாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியிருக்கிறார். ஆனால் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை.

மேடம், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களிடமிருந்தும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிடமிருந்தும் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். எங்களுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இல்லையெனில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் கௌரவத்தை இழிவுபடுத்துவீர்கள். நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என நீங்கள் எங்கள் மீது கோபமாக இருக்கிறீர்களா என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

விடுதலைப் புலிகள் ஒரு கொடிய பயங்கரவாத அமைப்பு, அவர்கள் அப்பாவி மக்களை கொன்றார்கள். அவர்கள் சிங்களவர்களையும், தமிழர்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், ஒரு முறை இந்தியப் பிரதமரைக் கொன்று குவித்தார்கள், அரசியல்வாதிகளை கொல்வதற்கு தற்கொலைப் படைகளைப் பயன்படுத்தினார்கள். தமிழ் அரசியல் தலைவர்களையும் கொன்றார்கள். அவர்கள் தாய்மார்களையும் குழந்தைகளையும் வெட்டினார்கள்.

இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக எந்த அழிவினையும் மேற்கொள்ளவில்லை.

அவ்வாறு மேற்கொண்டிருந்தால், யுத்தம் நிறைவடைந்த ஒரு வருடத்திலேயே- 2010 இல்- நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி ஒருவருக்குத் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகளை விடவும் அதிகமான வாக்குகளை வழங்கி இருக்க மாட்டார்கள்.

இதன்மூலம், தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினர் செயற்பட்டனர் என்ற கருத்தைத் தமிழ் மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், பின் வரிசை இராணுவ உறுப்பினர்கள் சிலர், ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற ஐயம் எனக்கு இருந்தது.

இராணுவத்தினரை அவப்பெயருக்கு உட்படுத்தாதிருக்க. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு.

ஏப்ரல் 21, 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வரும் கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

Leave a Comment