,இன்று (23) புதன்கிழமை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
“எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக இன்று (23) சுழற்சி முறையில் மின்வெட்டு செய்ய இலங்கை மின்சாரசபையால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்தது. A,B,C ஆகிய பகுதிகளுக்கு 4 மணிநேரம் 40 நிமிடங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் 4 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்” என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரம் தயாரிக்க தினமும் சுமார் 4000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுகிறது.
இன்றைய எரிபொருள் தேவை 4,000 மெட்ரிக் தொன் . ஆனால் 1000 மெட்ரிக் தொன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று எரிபொருள் தட்டுப்பாடு 3000 மெட்ரிக் தொன் ஆகும்.அவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டால், 750 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
“காலையில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், இரவு முழுவதும் மின்வெட்டு இருக்கும்” என்று தெரிவித்தார்.
