யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று (22) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
உலகத் தமிழர் பேரவையென்ற பெயரில் இயங்கி வரும் சிலரும், எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து, அண்மையில் தமிழக முதல்வருக்கு கடிமொன்றை அனுப்பியிருந்தனர்.
இந்த கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சர்ச்சையானதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
இந்த கடிதத்தில், மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் பேசாமல் விட்டமை குறித்து இந்த கலந்துரையாடலின் போது பேசப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
இந்த கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் தனக்கு தெரியாதென மாவை சேனாதிராசா குறிப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.