24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு மரணம்: வைத்தியசாலையின் தவறே மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன்று மரணமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையின் தவறே குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் 9 மாதக் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குழந்தையை கோவிட் விடுதிக்கு கொண்டு சேர்ந்து பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் 5 ஆம் விடுதியில் அனுமதித்து சிகிச்சையளித்து இருந்தனர். இன்று காலை வரை பெற்றோருடன் கதைத்த குழந்தையின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், குழந்தை மரணமடைந்துள்ளது.

குறித்த குழந்தையின் மரணத்திற்கு வைத்தியசாலையின் தவறே காரணம் எனத் தெரிவித்து பெற்றோர் வைத்தியசாலை விடுதியில் முரண்பட்ட நிலையில் பொலிசார் அவர்களை வெளியேற்றி இருந்தனர். இந்நிலையில் தமது குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வவுனியா பொலிசில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதுடன், வைத்தியசாலை நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த டினோஜன் அக்சயன் என்ற 9 மாத குழந்தையே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்துரையாடியதுடன் குறித்த குழைந்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

மீண்டும் திரிபோசா

east tamil

Leave a Comment