Pagetamil
குற்றம்

வவுனியா சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த ரவுடிகள் தாக்குதல்!

வவுனியா, குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மாலை மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றி வரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

குறித்த சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிற்குள் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த ரவுடிகள், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது, அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு பொலிசார் சமூகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த இருவரில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment