பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முதல் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் புதிதாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவித்து அதைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பெப்ரவரி 20ஆம் திகதி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக விக்ரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகவும், இதனால் எடுக்கவுள்ள நிறைய காட்சிகள் மீதமிருப்பதாகவும் தெரிவித்துள்ள கமல்ஹாசன், இதற்கான படப்பிடிப்பு காரணமாக இனி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படப்பிடிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழலே இதற்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இந்த முடிவில் விஜய் டிவி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் ஒத்துழைத்ததாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக இது மிகச் சிறிய இடைவெளிதான் என்றும் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 இல் சந்திக்க வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.