மத்துகம, பாலிகா வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
தில்ஷானி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது குழந்தைகளுடன் அறையொன்றிற்குள் புகுந்து கதவை மூடியிருந்ததுடன், துப்பாக்கிதாரிகள் அறையின் கதவிலும் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வீட்டின் மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
3