நெடுந்தீவில் மதுபானச்சாலைக்கு எதிராக போராட்டம்

Date:

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெடுந்தேவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வேண்டாம் வேண்டாம் எமக்கு சாவு வேண்டாம், எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே! எனும் பதாதைகளைத் தாங்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மதுபான சாலைக்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் பாடசாலை, கோவில்கள் என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபான சாலை அனுமதி வேண்டாம் என பொதுமக்கள் இதன் போது வலியுறுத்தினர்.

இது தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் மதுவரித் திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியது.

குறித்த அனுமதியை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் மது வரித் திணைக்களத்திற்கு இடையில் இன்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எனவே அனுமதியினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்