புலிகளுக்கு நிதி சேகரித்ததாக கைதாகிய நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி வீதியை சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கின் எதிரியான கந்தப்பு ராஜசேகர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின் படி இறுதி யுத்தகால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010.10.19 ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்