தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் கருத்தரங்கு இன்று (16) காலை இடம்பெறும்.
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வும், தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெறும்.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த அரசியல் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1