25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்படுவதற்கு சிலோன் மீடியா போரம் கண்டனம்!

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படும் ஊடகத்தின் பரிணாம வளர்ச்சியில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பத்திரிகை விவரண நிகழ்ச்சி மற்றும் அரசியல் உரையாடல் நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்து வரும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது கல், தடி மற்றும் மலம் போன்றவைகளை கொண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, ஊடகத்துறையின் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கிறோம். இந்த தாக்குதலை சிலோன் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. என அறிக்கையொன்றினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு இதற்கு முன்னரும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதனால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த அரசினதும், பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு என இங்கு அழுத்தம், திருத்தமாக சிலோன் மீடியா போரம்வலியுறுத்தியுள்ளது. பல தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகத் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார். தாக்குதல் மேற்கொள்ளவந்த இனந்தெரியாத நபர்கள் சமுதிதவின் வீடு அமைந்துள்ள வீட்டு வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை மிரட்டியுள்ளனர். மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் வெள்ளை வேனில் வந்த நான்கு ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவது சாதாரண விடயம் என்பதனால் இலங்கை காவல்துறை இது தொடர்பில் கரிசனை செலுத்துமாயின் விரைவாக விசாரணை நடத்தி குறித்த இனம்தெரியாத குண்டர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியும் எனசிலோன் மீடியா போரம் நம்புகிறது.

இது தொடர்பில் அரச உயர்மட்டம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் நடவடிக்கை திருப்தியளிப்பதாகவும், நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருந்தாலும் ஊடகவியலாளார்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கதையாகி வருவது வருத்தமளிக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

Leave a Comment