25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
உலகம்

டைனோசர்களிற்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டதா?: ஆய்வில் வெளியான தகவல்!

டைனோசர்களிடமும் COVID-19 போன்ற சுவாசத் தொற்றுநோய்கள் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களிடம் அதன் அறிகுறிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மொண்டானா (Montana) மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு டைனோசரின் கழுத்து எலும்புப் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

150 மில்லியன் வருடங்களிற்கு முன்னர் வாழ்ந்த டைனேசர் அது.

Dolly எனும் அது சைவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் வகையைச் சேர்ந்தது என்று கூறப்பட்டது.

டைனோசர் எலும்புக்கூட்டின் கீழ் தாடை எலும்பில் பல துளைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ட்ரைக்கோமோனாஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட தற்கால காலப் பறவைகளில் காணப்படும் காயங்களைப் போலவே துளைகள் உள்ளன, இது விழுங்குவதையும் சுவாசிப்பதையும் கடினமாக்குகிறது.

அது இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, Dollyக்கு aspergillosis எனும் தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நோய்க்குச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், இக்காலப் பறவைகள் மடியக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நோய்களால் டைனோசர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து அறிய ஆய்வுமுடிவுகள் உதவும் என்றும் நம்பப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment