Pagetamil
இலங்கை

‘கிளிநொச்சியில் பொலிசாரின் டிப்பர்களும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றன’: சி.சிறிதரன் எம்.பி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிசார், இராணுவத்தினரின் துணையுடனேயே இடம்பெறுகிறது. பொலிசாரின் டிப்பர் வாகனங்கள் கூட மணல் ஏற்றுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்தார்.

‘கிளிநொச்சியில் பல இடங்களில் மணல், கிரவல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. பொலிசாரின் டிப்பர் வாகனங்களும் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மக்கள் சொல்கிறார்கள். அந்த வாகன இலக்கங்களையும் சொல்கிறார்கள்.

பல இடங்களில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை கடந்தே மணல் டிப்பர்கள் செல்கின்றன. எப்படி அவை செல்கின்றன.

மணல் அகழ்வு பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்கினால், தகவல் தந்தவர்களின் விபரங்களையும் பொலிசார் கடத்தல்காரர்களிற்கு வழங்கி விடுகிறார்கள்’ என தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்களும் ஈடுபட்டு வருவதாக நீண்டகாலமாக சமூக ஊடகங்களில் குற்றம்சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே, இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி பிரமுகர் சி.சிறிதரன் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment