ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை கைது செய்து மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்க தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தினர். அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், மேலும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இன்று மூன்றாம் நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று மாலை ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்திலிருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று சென்னைக்கு செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தை கைவிட கோரி ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், மெரைன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவாத்தையில் கலந்து கொண்ட மீனவர்கள் திட்டமிட்டபடி நாளை மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக கூறி கூட்டத்திலிருந்து எழுந்து சென்றனர். பின்னர் அரசுத்துறை அதிகாரிகள் பலமுறை கேட்டுக்கொண்டும் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை கை விட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீனவர்கள் அறிவித்தபடி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசிற்கு நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் மீனவர்கள் திட்டமிட்டபடியே இன்று மாலை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சென்னை விரைவு ரயில் முன்பாக ரயிலை செல்லவிடாமல் மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சென்றனர். ஆனால் மீனவர்களை ரயில் மறியல் செய்ய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனால் அந்த பகுதி முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் இதனுடைய போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதனை அடுத்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வாயில் முன்பாக அமர்ந்து மீனவர்கள் தர்ணா போராட்டம் மட்டும் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனை எடுத்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.