அரசுக்கும், கடற்படைக்கும் வெள்ளையடிக்கும் முயற்சியில் அமைச்சர் டக்ளஸ்: நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

Date:

மீனவர் விவகாரத்தில் அரசுக்கும், கடற்படைக்கும் வெள்ளையடிக்கும் முயற்சியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி.

நேற்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லைதாண்டிவந்த படகுகள்காரணமாகவும், தென்பகுதியில் இருந்து வருபவர்களால் எமது மீனவர்களிற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் காரணமாக,எமது மீனவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், இலங்கை கடற்படை பார்த்துக் கொண்டிருந்த போது எல்லைதாண்டிவந்த இந்திய மீனவர்களின் றோலர்படகுகள் மோதி படுகொலை செய்யப்பட்டனர்.

இது கடந்த 13 வருடங்களாக நடக்கிறது. இந்திய, தென்பகுதி மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எமது மீன்வளம் கபளீகரம் செய்யப்படுவதுடன், மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன. படகுகள் சேதப்படுத்தப்படுகிறது. கடலில் கொல்லப்படுகின்றனர்.

மாதகல் கடலில் கடந்த ஜனவரி மாதம் இலங்கை கடற்படையினர் வேண்டுமென்றே படகால் மோதி மீனவரை படுகொலை செய்தனர். கடற்படையின் காணி அபகரிப்பை எதிர்த்ததால் அவரை குறிவைத்து கொன்றனர்.

மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களை வெளியேற்றி, கரையோரங்களை சிங்கள பௌத்த மயமாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இவை.

இதற்கு, யாழ்ப்பாணத்திலிருந்து மக்களின் வாக்குகளால் தெரிவாகி, அரசாங்கத்துடன் தொங்கிக் கொண்டுள்ள, முதுகெலும்பில்லாத, கடற்றொழில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் உறுதுணையாக இருந்து, அழிவுகளிற்கு துணைபோவது இனத்தின் சாபக்கேடு.

இப்படியான நடவடிககைகளால் யாழ் மாவட்டத்தில் 23,000 மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஜனவரி31ஆம் திகதி இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக மீனவர்கள் போராடியபோது, அந்த குடும்பங்கள் பட்டினியால் தவித்தன. இதன்போது கடற்றொழில் அமைச்சு அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை.

மக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளையடித்தவர் இன்று அரசுக்கும், கடற்படைக்கும் வெள்ளையடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். வெள்ளப்பெருக்கு, இயற்கை அனர்த்தம் வரும் போது நிவாரணம் வழங்குகிறீர்கள். ஆனால் மீனவர்கள் கொல்லப்படும் போது, அவர்கள் தமது பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்திய போது, இந்த அமைச்சர் பச்சைத்தண்ணீர்கூட கொடுக்கவில்லை.

பின்னர் பொலிசார் நீதிமன்றம் சென்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, தடையுத்தவை பெற்றனர்.

ஆனால்,க.பொ.தஉயர்தர பரீட்சை காரணமாக  மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்காவிட்டால் தொடர்ந்து போராடுவார்கள்.

அந்த மக்களுடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த பிரச்சனைகளை வெளிக்கொணரும் விதமாக நேற்று இங்கு ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்படவிருந்தது. இதன்போது எம்மை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள், இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து அத்துமீறும் மீனவர்கள கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம், ஆகவே இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழையுங்கள் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரேரணை நிறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடவடிக்கையெடுப்பதாக சொல்ல முன்வந்துள்ள நிலையில், இன்றுவரை இந்த அரசின் முதுகெலும்பில்லாத அமைச்சர்தான் குழறிக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார், இறைமை பற்றி பேசுகிறார், பிரதமர் அதைப்பற்றி பேசுகிறார். ஆனால் எமது மீனவர்களை பற்றி பேசுகிறார்கள் இல்லை.

250 மில்லியன் ரூபாவில் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு சிங்கள மீனவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு தமிழ் மீனவர்களை அங்கிருந்து அகற்றி, சிங்கள மயமாக்க அரசாங்கம் கொள்கைத் திட்டத்தை வைத்துள்ளது. இதனால்தான் நாம் கேட்கிறோம், ஒற்றறாட்சிக்குஉட்பட்ட எந்த தீர்வும் எம்மை பாதுகாக்காது. இதனால்தான் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலிறுத்துகிறோம் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்