போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்க வேண்டும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்படிப்பட்டவர்களை செல்லமாக வைத்து எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை என திரு.நிமல் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இன்று பலர் இதனை பேசுவதற்கு அஞ்சுவதாக தெரிவித்த தொழிலாளர் அமைச்சர், இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நீதியமைச்சர் ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1