ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ மேயர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இன்று காலை ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தனது முடிவை அறிவித்த பெர்னாண்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட சென்றிருந்த வேளையில், ஏராஜ் பெர்னாண்டோ கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.