மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றி இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (9) இந்த சம்பவம் நடந்தது.
நேற்று இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, மண்ணெண்ணெய் அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்துள்ளது. இதையடுத்து, மண்ணெண்ணெய் விட்ட போது, தீ விபத்து ஏற்பட்டது.
ஆ.தர்ஷிகா (30) என்பவரே காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1