ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குளியாப்பிட்டி நீதவான் ஜனனி சசிகலா விஜேதுங்கவிடம் இன்று (10) தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு திணைக்களம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இம்மாதம் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.