பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.
ரிஷாட்டும், மனைவியும் கட்டாரில் செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக தயாரான நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
தனது வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிய ஜூட் குமார் இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் அவர்களிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1