கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த, குறித்த தேவாலயத்தின் ஊழியர் பிரான்சிஸ் முனிந்திரன் (முனி) இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1