26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
கிழக்கு

‘டயஸ்போராவுடன் தொடர்பு வைத்தால் தியேட்டர் மோகனைப் போல உள்ளே இருக்க வேண்டி வரும்’: மட்டு ஊடகவியலாளருக்கு ‘அட்வைஸ்’!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

கடந்த இரண்டு நாட்களாக ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டுக்குச் சென்ற ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இருவர் விசாரணை ஒன்று இருப்பதனால் ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் படி இன்று (09) மதியம் 12 மணிக்கு ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான நிலாந்தனை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த யூலை மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்ட போது கேட்கப்பட்ட கேள்விகளை கேட்டே குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும்

நீங்கள் எந்த எந்த ஊடகங்களில் பணியாற்றுகிறீர்கள்? நீங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரா? நீங்கள் புனர்வாழ்வு பெற்றுள்ளீர்களா? உங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறதா? காணாமல் போன அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளீர்களா? எத்தனை நீதிமன்ற வழக்குகள் உள்ளன? முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தயாமோகனுடன் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு எழுதிக்கொண்டனர்.

ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை OIC அவர்கள் நீங்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் முன்னாள் விடுதலைப் புலிகளுடன், டயஸ்போராவுடன் தொடர்பை வைக்க வேண்டாம். உங்களுக்கு டயஸ்போரவுடன் தொடர்வு இருப்பதாகவும் உங்களை விசாரணை செய்ய சொல்லி நிறைய முறைப்பாடுகள் எங்களுக்கு கொழும்பில் இருந்து வந்துள்ளது. எல்.டி.டி எல்லாம் அழிஞ்சு போயிற்றுது எனவே அந்த செயற்பாடெல்லாம் விட்டு விட்டு பேசாம இருக்க வேண்டும். இல்லாட்டி தியேட்டர் மோகனை போல் வருடக் கணக்கில் உள்ளுக்கு இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்து அனுப்பியதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

Leave a Comment