நோயாளியை கள்ளகாதலியாக்கி, மகளை சீரழித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்!

Date:

அம்மாவிடம் தகாத தொடர்பு வைத்த எலும்பு முறிவு டாக்டர் பள்ளி மாணவியான மகளிடமும் அத்துமீறியதால் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான பி.கே.என். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் மோகன்குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் சொல்லி டாக்டர் மோகன்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். மேலும் இரவு வரை அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். தாய் நடவடிக்கை குறித்து தந்தைக்கு தொலைபேசி மூலம் மாணவி தெரிவித்துள்ளார் மாணவியின் தந்தையும், தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் போது மாணவியை டாக்டர் மோகன்குமார் காரில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, மாணவியிடம் அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, நீயும் என்னுடன் இதே போல நெருக்கமாக இரு என கூறியுள்ளார். சிறுமி மறுக்கவே அவரை அடித்ததாகவும், கொரானா காலத்தில் மாணவி ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த டாக்டர் பயாலஜி சொல்லித் தருகிறேன் என கூறி அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து, இது போல தான் பாடத்தில் வரும் என தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.

2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மாணவி சிவகங்கை எஸ்.பி.செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் விசாரனை செய்து வழக்கு பதிந்து எழும்பு முறிவு டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்