அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் கோவிட்-19 தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இரண்டு அணிகளிற்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.
வழக்கமான ரபிட் அன்டிஜென் சோதனையின் போது மெண்டிஸ் கோவிட்-19 தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்துள்ளதாக அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்தார்.
மெண்டிஸ் இல்லாத நிலையில், தினேஷ் சண்டிமால் விக்கெட் கீப்பிங் பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய தொடருக்காக சென்றுள்ள 20 பேர் கொண்ட இலங்கை அணியின் பல வீரர்களும், உத்தியோகத்தர்களும் இதுவரை தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
முதல் இரண்டு போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், மூன்றாவது போட்டி மனுகா ஓவல் மைதானத்திலும், கடைசி இரண்டு போட்டிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.




