இன்றைய வானிலை

Date:

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இரவிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம் – சீரான வானிலை.
மன்னார் – சீரான வானிலை.
மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்.
திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும்.
கண்டி – பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இரத்தினபுரி- பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அனுராதபுரம் – சிறிதளவில் மழை பெய்யும்.
கொழும்பு – பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகன தரிப்பிடத்தில் விவாகரத்துக்கு நீதிமன்ற சென்று திரும்பிய கணவன் மனைவி மைத்துனருக்கிடையே சண்டை 3 பேர் கைது

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி  வந்த...

கிளிநொச்சியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் வல்லுறவு

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல்...

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்!

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்