20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் மேன் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து, மேன் முறையீட்டு நீதிமன்த்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டத்தரணி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்த நிலையில், அவர் இன வெறுப்பை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், இது இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு அவர் 10 மாதங்கள் காவலில் இருந்தார்.