வவுனியா – பம்பைமடு பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் கட்டுப்பாட்டையிழந்து விபத்து

Date:

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (07) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி சென்ற ஹன்ரர் ரக வாகனம் ஒன்று வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழகம் முன்னால் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஹன்ரர் வாகனத்தின் சாரதியும், நடத்துனரும் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்