போதைப்பொருள் கடத்தல்: நோயாளர் காவு வண்டியின் உதவியாளரும் கைது!

Date:

பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் நோயார் காவு வண்டியின் உதவியாளர் ஒருவர் பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரியான சாலித என்பவருக்கு சொந்தமான போதைப் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான நோயார் காவு வண்டியின் உதவியாளருக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு உதவுவதற்காக அவ்வப்பொழுது பணம் வழங்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் இருந்து இரண்டு கர்ப்பிணிப் பெண்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு செல்ன்ற நோயார் காவு வண்டியை, மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் வழிமறித்து, துப்பாக்கிச்சூடு  நடத்தினர்.

நோயார் காவு வண்டியின் சாரதியை கைத்துப்பாக்கியால் சுட முயன்ற போது, துப்பாக்கி இயங்க மறுத்தமையால், சாரதி பாதிப்பின்றி தப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது, நோயார் காவு வண்டியின் சாரதிக்கும், போதைப்பொருள் கடத்தலிற்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பிலேயே, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, நோயார் காவு வண்டியின் சாரதி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்