கனடாவில் கொல்லப்படவுள்ள 12,000 வான் கோழிகள்!

Date:

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் பறவைகளிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.  மாகாணத்தில் உள்ள பறவைகளுக்கு இடையே தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலான பறவைகளை உயிர் இழக்கச் செய்துள்ளது.

தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலினால் சுமார் 12000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளன.

நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு கோழி பண்ணையில் இருக்கும் 12000 வான்கோழிகளை கொல்லப்பட உள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

Avian influenza என்றழைக்கப்படும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை எது என்ற விவரங்களை வெளியிடவில்லை.

அந்த குறிப்பிட்ட பண்ணையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள மற்ற கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்