திருமணத்திற்கு சற்று முன்னதாக இளம் யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
கேரளாவின், கலந்தித்தாழம், நாங்கோலம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (6) காலை நடந்துள்ளது.
கலந்தித்தாழம் நாங்கோலத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு – சுனிலா தம்பதியரின் மகள் மேகா (30) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நேற்று அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.மண்டபத்தில் அலங்காரப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மேகாவை அலங்கரிக்க, அழகு நிபுணரும் வந்திருந்தார். குளித்து விட்டுவருவதாக கூறி, குளியலறைக்கு சென்ற மேகா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேகா தனியார் மருத்துவமனையில் தாதிய மாணவி. மேகாவுக்கும் அதே மருத்துவமனையில் தாதிய உத்தியோகத்தருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மேகா தற்கொலைக்கு முன்பாக சிறு குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதில் ‘அவருக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும். அப்போதும் அவர் பின்வாங்கவில்லை. அவருடன் என்னால் வாழ முடியாது” என்று எழுதியுள்ளார்.
சேவாயூர் நிலைய அதிகாரி சந்திரபாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலைக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.




