நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1