ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழங்கள் 6 மாதங்களின் பின் மீளத்திறந்தன!

Date:

ஆப்கானிஸ்தானில் சில பொதுப் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

லக்னான், நாங்கஹார், கண்டஹார், நிம்ரோஸ், ஃபாரா, ஹெல்மான்ட் ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன.

மீண்டும் திறக்கப்பட்டபின் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கல்வி பயில்வதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் கல்வி பயில்வதை எதிர்க்கவில்லை என்று தலிபான் தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக வகுப்புகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி பயிலக்கூடாது என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

வரும் மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து பெண்கள் பாடசாலைகளும் திறக்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.

தற்போது 150 பொதுப்பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தலிபான்களின் இந்த நடவடிக்கையை ஐநா வரவேற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்