வவுனியாவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

Date:

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஓமந்தை பகுதி நோக்கி டிப்பர் பயணித்துக் கொண்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனத்தினை சாரதி திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

இதன்போது, டிப்பர் வாகனத்திற்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றுமொரு டிப்பர் வாகனம் குறித்த டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன், வீதிக்கு அருகே நின்ற மோட்டார் சைக்கிளும் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்பக்கமாக வந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்