வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
வத்திராயனிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து, அந்த பிரதேச மக்கள் கொந்தளித்து போய், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் கொல்லப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்தும், கொல்லப்பட்ட மீனவர்களிற்கு நீதி கோரியும் இன்று காலை 7 மணி தொடக்கம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்குள் யாரும் நுழையாத விதமாக பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
-பருத்தித்துறை செய்தியாளர் எம்.லக்ஷனா-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1