Pagetamil
இலங்கை

A/L பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களிற்கு நாளை முதல் தடை!

2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவது நாளை – பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், பரீட்சை சார்ந்த வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை விநியோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பித்து, மார்ச் 5ஆம் திகதி முடிவடையும்.

“ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறினால், அருகிலுள்ள காவல் நிலையம், பரீட்சைகள் திணைக்களம் அல்லது பின்வரும் எண்களில் புகார் அளிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகம்: 0112421111

காவல்துறை அவசர எண்: 119

ஹொட்லைன் (பரீட்சைகள் திணைக்களம்): 1911

பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு பிரிவு: 0112784208 / 0112784537

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

Leave a Comment