தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் நேற்று (30) முட்டை வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது. தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டிற்கு சென்றபோதே இவரது வாகனம் முட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாடு நேற்று பிற்பகல் கலகெடிஹேன தனியார் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனம், மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தாக்குதலிற்கு உள்ளானது.
தாக்குதல் நடத்திய இரண்டு குண்ட்களை, கட்சி ஆதரவாளர்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சுமார் 16 பேர் வந்துள்ளதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.