பதுளை, அட்டம்பிட்டிய, கெரன்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (29) மாலை 4.00 மணியளவில்இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டம்பிட்டிய தோட்டத்தின் முதல் பகுதியைச் சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்பிரமணியம் காஞ்சனா (21), பவானி (22), சிந்து (18), சிரியா (20) ஆகியோரே நீரில் மூழ்கினர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒரு யுவதியின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டம்பிட்டிய தோட்டத்தின் முதலாம் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பதினொரு பேர் கொண்ட குழுவொன்று கார்டி நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நீர் மிகவும் ஆழமாக உள்ளதால் யாரும் அதில் குளிப்பதில்லை என அட்டம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடம்பிட்டிய பொலிஸாரும், இராணுவத்தினரும் நீருக்கடியிலிருந்து நான்கு சடலங்களை மீட்டுள்ளனர்.
காணாமல் போன சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்கிறது.