கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவில் தீயில் கருகிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புன்னைநீராவி, நாதன் குடியிருப்பு பகுதியிலேயே இன்று (21) மாலை இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் நேற்று (20) நள்ளிரவு 11.50 மணியலவில் தீீயில் எரிந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலையே அவர்கள் தீயில் எரிந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.
தந்தையும் மகனும் குடும்பச் சுமை காரணமாக கூலிவேலைக்கு வெளி மாவட்டத்திற்கு சென்ற சமயத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என் பொலிசார் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆனந்தராசா சீதேவி (47) என்ற 07பிள்ளைகளின் தாயாரும், அவரது மகளான லக்சிகா (17) என்பவருமே தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர்.
தருமபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
2
+1
1
+1
3