திருகோணமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (19) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 18 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய இரட்டை குழந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தம்பலகாமம், கன்னியா, நிலாவெளி மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் போன்ற இடங்களில் தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வருவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வரும்போதும் பாதுகாப்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து வருகை தருமாறும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்