இலங்கை தற்போது மூன்று பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது ஆகியவை அவற்றுள் அடங்கும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பரந்த விவாதம் மற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த கொள்கை விளக்கத்தை வழங்கியதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு மற்றும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஜனாதிபதி விரிவாக விளக்கினார் என்று அமைச்சர் கூறினார்.